முதல்வர் மெடிக்கல் ரிப்போர்ட்டை படித்த நர்ஸ் டிஸ்மிஸ். அப்பல்லோ நிர்வாகம் அதிரடி

முதல்வர் மெடிக்கல் ரிப்போர்ட்டை படித்த நர்ஸ் டிஸ்மிஸ். அப்பல்லோ நிர்வாகம் அதிரடி

appololloதமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒருவாரம் ஆகிவிட்டது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது கூறி வந்தாலும், இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் நேற்று முதல்வருக்கு மேலும் சில உடைகள் கார்டனில் இருந்து எடுத்து வரப்பட்டதாம்.

இந்நிலையில் கிட்டத்தட்ட அப்பல்லோ மருத்துவமனை முழுவதுமே உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘முதல்வரின் உடல்நலன் குறித்த அறிக்கை கணினியில் பதிவேற்றப்படுகிறது. இதற்கான பாஸ்வேர்டு தளத்தின் பொறுப்பாளரிடம் மட்டுமே இருக்கும். மருத்துவர்களைத் தவிர வேறு யாருக்கும் இதைப் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், நேற்று யாரோ ஒருவர் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்துவிட்டார். இப்படிச் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

‘ இதைச் செய்தது ஒரு நர்சுதான்’ என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். ‘பாஸ்வேர்டு எப்படித் தெரிந்தது’ என தீவிர விசாரணை நடத்தி, இரண்டு நர்சுகள் மற்றும் மருத்துவர்களின் இரண்டு செயலாளர்களை வளையத்தில் கொண்டு வந்தோம். இதற்குக் காரணமான இரண்டு நர்சுகளையும் ஒரு செயலாளரையும் பணியில் இருந்தே நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம். ஒரு மருத்துவரின் செயலாளருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. எங்களைத் தாண்டி எந்தத் தகவல்களும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம். ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் பணிக்கு வந்த பின்னரும் வீட்டுக்குச் சென்ற பின்னரும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.

Leave a Reply