சீன பெருஞ்சுவர் அருகே உலகின் மிகப்பெரிய ரயில் நிலைம். சீனா முடிவு

சீன பெருஞ்சுவர் அருகே உலகின் மிகப்பெரிய ரயில் நிலைம். சீனா முடிவு

china-railwayஉலக அதிசயங்களில் ஒன்றாகவும், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வரும் சீனப்பெருஞ்சுவர் அருகே உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை சீனா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சீனாவின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட உள்ளது.

சீனப் பெருஞ்சுவரை பார்வையிட நாள் ஒன்றுக்கு 30,000 பேர் வந்து செல்லும் நிலையில் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த இந்த புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இதே ஆண்டில்தான் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சீன ரயில்வே துறை கூறும்போது, “புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே உருவாக்கப்படவுள்ளது. இதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பரப்பின் அளவு ஐந்து கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சமம். இந்த புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளன. மேலும் இந்த ரயில் நிலையத்தால் சீனாவின் தொன்மையான அடையாளமான சீன பெருஞ்சுவருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணமே உருவாக்கப்படவுள்ளது” எனக் கூறியுள்ளது.

Leave a Reply