இந்திய தாக்குதல் எதிரொலி: அவசரமாக கூடுகிறது பாகிஸ்தன் பாராளுமன்றம்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களின் மீது நேற்று இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தா, வரும் அக்டோபர் 5ஆம் தேதி பாராளுமன்றத்தை கூட முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது சதி முறியடிப்பு தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியது.
இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லைப் பகுதியில் இரு நாட்டினரும் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 5-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.