சார்க் மாநாடு ரத்து. பாகிஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்தியா உள்பட நான்கு நாடுகள் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளதால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் நடக்கவிருந்த 19வது சார்க் மாநாடு ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
உரி தாக்குதல் காரணமாக வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்திய பிரதம மோடி கலந்து கொள்ள மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பூடான், பங்களாதேச் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளது.
8 நாடுகளின் உறுப்பினர்களை கொண்ட சார்க் அமைப்பில் ஐந்து நாடுகள் கலந்து கொள்ள மறுத்துவிட்டதால் இந்த மாநாடு ரத்து செய்யப்படுகிறது.