இயக்குனரின் செக்ஸ் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றாரா பிரபல நடிகை?
புதுமுக இயக்குனர் செல்வகண்ணன் என்பவர் இயக்கி வரும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் நடித்து வரும் இளம் நடிகை அதிதி, இயக்குனர் மீது செக்ஸ் புகார் கூறியதோடு தற்கொலைக்கும் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடிகை அதிதி, நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால் அதிதி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால், அவரது புகாரை விசாரிக்க முடியாது என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அதிதி, செல்வகண்ணன் ஆகிய இருவருமே மாறி மாறி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் போலீஸார் இருவரையும் அழைத்து விசாரித்ததாகவும் அவரவர் சங்கங்களில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
செக்ஸ் தொல்லை காரணமாக அதிதி நெடுநல்வாடை படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை அதிதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாட்ஸ் அப்களில் தகவல் பரவியது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.