காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பாகிஸ்தானே காரணம். ஹெச்.ராஜா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பாகிஸ்தானே காரணம். ஹெச்.ராஜா

complaint against H.Rajaகாவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்திய நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை, தற்போது அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தமிழக அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தனது விளக்கத்திற்கு மேலாண்மை வாரியம் அமைக்க முடியாததற்கு பாகிஸ்தானே காரணம் என கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஒருவர் மாநில கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டது சரியா? பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை, தற்காலிகமாக அமைக்க முடியாது என்றுதான் மத்திய அரசு கூறி இருக்கிறதே தவிர, நிரந்தரமாக அதற்கு மறுப்பு கூறவில்லை. மேலும், எல்லையில் பிரச்னை தற்போது அதிகரித்துவரும் சூழலில்தான், மத்திய அரசால் காவிரி நதிநீர் தொடர்பான விஷயத்தில் உடனடி முடிவை எட்டமுடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, மத்திய அரசு வழக்கில் சேர்க்கப்படாததும் மற்றொரு காரணம். ஆனால் தமிழக பாஜக இதுதொடர்பாக, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கும்” என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘”உச்ச நீதிமன்றத்தை விட மத்திய அரசு அமைக்கும் வாரியம் ஆற்றல் மிகுந்ததாக நிச்சயம் இருக்க முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே எதிர்க்கும் கர்நாடக அரசு, காவிரி நதிநீர் வாரியத்தின் சொல்லுக்கு மட்டும் கட்டுப்பட்டுவிடுமா?.இதனால்தான் மத்திய அரசு வாரியம் அமைப்பதில் தாமதம் காட்டிவருகிறது. மத்திய அரசு மீண்டும் கூட்டவிருக்கும் கூட்டத்தில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்தே நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் சதானந்த கவுடா, கர்நாடகாவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டது கண்டிக்கத்தக்கதே, இது தொடர்பாக மத்திய அரசிடமும் தமிழக பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளோம். எது நடந்தாலும் காவிரி நதிநீர் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்கிற தமிழக பாஜகவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply