ஷரபோவாவின் தடைக்காலம் குறைப்பு. வரும் ஏப்ரல் முதல் களம் இறங்குகிறார்

ஷரபோவாவின் தடைக்காலம் குறைப்பு. வரும் ஏப்ரல் முதல் களம் இறங்குகிறார்

TENNIS-WTA-FRA-OPENரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ‌ஷரபோவா. சமீபத்தில் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கியதால் 2 ஆண்டுகள் அவர் டென்னிஸ் விளையாட சர்வதேச டென்னிஸ் சங்கம் த்டை விதித்தது. இந்த தடையால் கடும் அதிர்ச்சி அடைந்த ஷரபோவா தான் வேண்டுமென்றே ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என்றும் தெரியாமல் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாகவும் கூறி 2 ஆண்டு தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். இந்த மனு கடந்த சில நாட்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் ‘ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளது விதிமுறையை மீறிய செயலாகும். இது மிகவும் அபாயகரமான தவறு அல்ல. சிறிய அளவிலான தவறு என்பதால் அவரது தடைக்காலம் 15 மாதங்களாக குறைக்கப்படுகிறது. இந்த தடைக்காலம் ஜனவரி 26-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது’ என்று தீர்ப்பு வழங்கியது.

இதனால் ஷரபோவாவின் தடைக்காலம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ந்தேதியுடன் முடிவடையும். அதன்பின் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம். இதுகுறித்து ஷரபோவா கூறுகையில் ‘‘மீண்டும் போட்டிக்கு திரும்பவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply