ஆயுதங்கள் கொடுக்காத ஒபாமா நரகத்திற்கு போவார். பிலிப்பைன்ஸ் அதிபர் சாபம்
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய முடியாது என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி முடிவை எடுத்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்துபவர்கள் என்று கூறி அப்பாவி அமெரிக்கர்களுக்கு தூக்குதண்டனை உள்பட கடுமையான தண்டனை வழங்கியதால் இந்த முடிவை ஒபாமா எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி, “அமெரிக்கா சில ஆயுதங்களை எங்களுக்கு விற்பனை செய்ய மறுக்கிறது. ஆனால் அதுப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் எங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தயாராக உள்ளது. மேலும் தங்கள் நாட்டுக்கு ஆயுதங்கள் தர மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் போவார் என்று தெரிவித்தார்.
ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டின் அதிபரை இப்படி கடுமையாக விமர்சித்துள்ளது உலக அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.