தீபாவளிக்கு தங்கம் வாங்க இன்றுதான் நல்ல நாள்!
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
22 கேரட் 1 சவரன் தங்கம் விலை ரூ.528 குறைந்து, 22,888க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,416 என்ற அளவில் விற்பனையானது.
22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.66 குறைந்து ரூ.2,861க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று ரூ.2,927 ஆக இருந்தது.
24கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.70 குறைந்து ரூ.3,060க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விலையில் வெள்ளி விலையும் ரூ.2 குறைந்து ரூ.46.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1895 குறைந்து ரூ.43,065 விற்பனையாகிறது.