உலகக்கோப்பை கபடி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

உலகக்கோப்பை கபடி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

kabadi-jgதற்போது நடைபெற்று வரும் 3வது உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏ பிரிவில் உள்ள இந்திய அணி முதல் போட்டியில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தாலும், அதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் வங்காள தேச அணியுடன் மோதி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரவு இந்திய அணி அர்ஜென்டினாவை சந்திக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்தப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பலவீனமான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜெண்டினா அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் (தென்கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) தோல்வி அடைந்துள்ளதல் மிக எளிதில் இந்திய அணி அர்ஜெண்டினாவை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply