சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு ஜப்பான் தடை

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு ஜப்பான் தடை

samsungசாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் இந்த போனுக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது ஜப்பானும் தடை விதித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் சமீபத்தில் திரும்பப்பெற்றதோடு இந்த மாடலின் புதிய போன்களின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.

மேலும் விமானங்களில் பயணம் செய்பவர்கள் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு புதிய உத்தரவு ஒன்றாஇ பிறப்பித்துள்ளது.

வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் சாம்சங் நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பேட்டரி இல்லாமல் கூட கொண்டு செல்ல வேண்டாம் எனவும் ஜப்பான் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் சாம்சங் நோட் 7 ரக போன்கள் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும் முன்னேற்பாடாக ஜப்பான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதேபோல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் விமானத்தில் சாம்சங் நோட் 7 போன்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply