ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு. திமுகவுடன் கூட்டணி முறிவா?

ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு. திமுகவுடன் கூட்டணி முறிவா?

thirunavukarasarதமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரின் படங்களை வெளியிட வேண்டும் என்றும் பொறுப்பு முதல்வர் நியமன்ம் குறித்தும் கருணாநிதி வெளியிட்ட கருத்துக்கு எதிர்க்கருத்து கூறிய திருநாவுக்கரசர், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமான விஜயகாந்தையும் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதனால் திமுக தலைமை திருநாவுக்கரசர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென டெல்லி சென்ற திருநாவுக்கரசர், ராகுல்காந்தியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திமுக கூட்டணி, தமிழக அரசியல் நிலவரம், 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து அவர் ராகுல்காந்தியிடம் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

ராகுல்காந்தி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழக அரசியல் நிலவரம், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

காங்கிரஸ் தலைவரான பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறேன். அந்த அடிப்படையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் சந்தித்தேன். தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது குறித்து விஜயகாந்திடம் எதுவும் பேசவில்லை என்றார்.

Leave a Reply