திருப்பரங்குன்றம் திமுக தோல்வி உறுதியா? தயாநிதி அழகிரியின் டுவிட்டால் பரபரப்பு

திருப்பரங்குன்றம் திமுக தோல்வி உறுதியா? தயாநிதி அழகிரியின் டுவிட்டால் பரபரப்பு

dayanidhiதஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

தஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களே போட்டியிடும் நிலையில் திருப்பரங்குன்றத்தில் மட்டும் டாக்டர் சரவணனை வேட்பாளராக நியமனம் செய்ததில் மு.க.அழகிரி தரப்புக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘டாக்டர் சரவணனை விட்டால் வேறு வேட்பாளரே திமுகவுக்கு கிடைக்கவில்லையா? என்று கூறியுள்ளார். மு.க.அழகிரியின் கருத்தையே இது எதிரொலிப்பதாக மதுரை திமுக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக திமுகவின் தோல்வி திருப்பரங்குன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply