மோட்டார் பைக் திருடினால் வாந்தி வருமாம். எப்படி தெரியுமா?

மோட்டார் பைக் திருடினால் வாந்தி வருமாம். எப்படி தெரியுமா?

bikeபைக் திருடர்களிடம் இருந்து பைக்கை காப்பாற்ற பலர் கோத்ரேஜ் பூட்டு உள்பட நவீன பூட்டுக்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் திருடர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் திருடுவதால் பைக் திருட்டை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் டேனியல் இட்ஸ்கோவ்ஸ்கி மற்றும் அவரது நண்பரால் தயாரிக்கப்பட்ட வித்தியாசமான பைக் பூட்டு ஒன்று அறிமுகமாகியுள்ளது.

இந்த பூட்டை கள்ள சாவி போட்டு திறந்தாலோ அல்லது உடைத்தாலோ ஒருவிதமான துர்நாற்றத்துடன் ‘கியாஸ்’ வெளிப்படும். ஒரு விதத்தில் அது ‘மிளகுப் பொடி’ போன்று மிக கடுமையான நெடியுடனும் இருக்கும். அதை சுவாசிப்பவர்களுக்கு வாந்தியும் தொடர்ந்து பல வித உடல் கோளாறுகளும் ஏற்படும். மேலும் இந்த பூட்டை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது.
இந்த புதுவிதமான பூட்டு பைக் திருடர்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் என்று கூறப்படுகிறது.

இந்த பூட்டை உருவாக்கிய டேனியல் இட்ஸ்கோவ்ஸ்கி தான் ஆசை ஆசையாய் வாங்கிய ஒரு விலையுயர்ந்த பைக்கை தொலைத்துவிட்டாராம். இதுதான் இந்த பூட்டை கண்டுபிடிக்க காரணமாம்.

Leave a Reply