விராத் கோஹ்லி அபார சதம். நியூசிலாந்தை பந்தாடியது இந்தியா
இந்தியா-நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாஅத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 285 ரன்கள் எடுத்தது. லாதம் 61 ரன்களும், நீஷம் 57 ரன்களும் எடுத்தனர்.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விராத் கோஹ்லியின் அபார சதத்தால் 48.2 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 154 ரன்களும் தோனி 80 ரன்களும் எடுத்தனர். விராத் கோஹ்லி ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் 26ஆம் தேடி ராஞ்சியில் நடைபெறும்.