ஈராக்கில் மதுவுக்கு தடை. இஸ்லாமியர்கள் வரவேற்பு. கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு

ஈராக்கில் மதுவுக்கு தடை. இஸ்லாமியர்கள் வரவேற்பு. கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு

alcoholஇந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்த ஆலோசித்து வருகின்றன. பீகார் மாநிலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. கேரளாவில் மதுவிற்பனை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக் நாட்டில் முற்றிலும் மதுவை ஒழிக்க அந்நாட்டில் மதுபானங்களுக்கு தடை விதிப்பது குறித்த சட்ட மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் காரணமாக இனிமேல் ஈராக் நாட்டில் மது தயாரிப்பது மட்டுமின்றி அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இனிவரும் காலங்களில் ஈராக் மது விற்பனை செய்தாலோ அல்லது மது உற்பத்தி செய்தாலோ 25 மில்லியன் ஈராக் தினார்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மதுவிலக்கை அமல்படுத்த ஈராக்கில் வாழும் பெரும்பாலான முஸ்லீம்கள் வரவேற்பு அளித்துள்ள நிலையில் சிறுபான்மையாக வாழும் கிறிஸ்துவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply