விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபல காஸ்ட்யூம் டிசைனர்

விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபல காஸ்ட்யூம் டிசைனர்

bairavaவிஜய் நடித்த ‘தெறி’ படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த சத்யா, தற்போது அவர் நடித்து வரும் ‘பைரவா’ படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தில் விஜய்யை ஸ்டைலாக காண்பிக்கும் வகையில் விதவிதமான காஸ்ட்யூம்களை சத்யா தயார் செய்துள்ளாராம். குறிப்பாக திருவிழா பாடலுக்கு கலர்கலராக இவர் உருவாக்கிய காஸ்ட்யூம்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் சுவிட்சர்லாந்து பாடலுக்காக விஜய்க்கு என பிரத்யேகமாக ஐந்து விதமான சூட்-கள் தயார் செய்துள்ளதாகவும் அவற்றை பார்த்த விஜய் ‘சத்யா பின்னிட்டேப்பா’ என்று பாராட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த பாராட்டே தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக கருதுவதாக சத்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply