தனுஷின் அடுத்த படத்தில் மடோனா செபாஸ்டியன்
தனுஷ் இயக்கி வரும் ‘பவர்பாண்டி’ திரைப்படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% நெருங்கிவிட்ட நிலையில் தற்போது முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.
ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ராஜ்கிரணின் சிறுவயது கேரக்டரில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறு கேரக்டர் என்றாலும் மடோனாலுக்கு பலம் வாய்ந்த கேரக்டர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவும் பிரசன்னா படத்தொகுப்பும் செய்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.