WTA டென்னிஸ் போட்டி: ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா வெற்றி
உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கு கொள்ளும் WTA டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரு பிரிவாக விளையாடப்பட்டு வரும் இந்த போட்டியின் ஒயிட் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா 7-5, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அவர் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 6-2, 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக்கில் கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) சாய்த்தார்.