ஒடிசா மாநில முதல்வர் மீது முட்டை வீசிய மர்ம நபர் கைது

ஒடிசா மாநில முதல்வர் மீது முட்டை வீசிய மர்ம நபர் கைது

odissaஒடிசா மாநில முதல்வர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் மீது மர்ம நபர் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது திடீரென அந்த கூட்டத்திலிருந்த காங்கிரஸ் மாணவர் அணியைச் சேர்ந்த ஒருவர் முதல்வரை நோக்கி முட்டையை வீசினார்.

ஆனால் அவர் வீசிய முட்டை நல்ல வேளையாக முதல்வர் மீது விழவில்லை. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.ஆனால் அதற்குள் முட்டை வீசிய நபரை முதல்வரின் ஆதரவாளர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கைது செய்யயப்பட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply