த்ரிஷாவுக்கு வந்த ஜெயலலிதா-ரஜினிகாந்த் ஆசை
கோலிவுட் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா ஆகிய இருவர் தான் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகைகளின் பட்டியலில் உள்ளனர். நயன் அளவுக்கு இல்லாவிட்டாலும் த்ரிஷாவுக்கும் அவ்வப்போது முக்கியத்துவமான கேரக்டர்கள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நாளை த்ரிஷா நடித்த ‘கொடி’ பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் த்ரிஷா அளித்த பேட்டியில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழும் முதல்வர் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி தனக்கு இல்லை என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்றும் அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாகவும் த்ரிஷா கூறியுள்ளார்.