இளம்பெண்ணின் வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.70 லட்சம். வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி
ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.70 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் குறித்து அப்பெண் வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் அந்த பணத்தை எடுத்து வீடு, கார், என உல்லாசமாக செய்து செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது அந்த பணம் வேறொருவரின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்கு பதிலாக இந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளதால் அப்பெண்ணிடம் இருந்து எப்படி பணத்தை மீட்பது என்று தெரியாமல் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண்ணிடம் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பெண் வீடுகள், மனைகள், விவசாய நிலம், கார்கள் ஆகியவற்றை விற்று எவ்வளவு வருகிறதோ அதை தருவதாக சம்மதித்துள்ளதாகவும் வங்கி தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அவர் எப்போது நிலத்தை விற்பது? எப்போது அவரிடம் பணத்தை வசூலிப்பது, அப்படியே வசூலித்தாலும் எவ்வளவு பணம் தேறும் என்று அதிகாரிகள் திணறி வருகின்றார்கள்.