லெனோவா Z2 ப்ளஸ் மாடலின் 10 சிறப்பு அம்சங்கள்

லெனோவா Z2 ப்ளஸ் மாடலின் 10 சிறப்பு அம்சங்கள்

1சீன நிறுவனத்தின் ‘லெனோவா’ மிக குறுகிய காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த மிகச்சில நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் அனைத்து மாடல் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் பிரபலாம்கியுள்ள நிலையில் தற்போது Z2 ப்ளஸ் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.

லெனோவா Z2 ப்ளஸ் மாடல் இரண்டு விலைகளில் இரண்டு மாறுபட்ட விதத்தில் வெளிவரவுள்ளது. ரூ.17,999 விலையில் 3 ஜிபி / 32 ஜிபி ஸ்டோரேஜிலும், ரூ.19,999 விலையில் 4 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜிலும் வெளிவரவுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் உடன், 13 எம்பி பிரைமரி கேமிரா மற்றும் 8 எம்பி செல்பி கேமிராவுடன் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் லெனோவா Z2 ப்ளஸ் மாடலின் பத்து சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

1. ஸ்லோ மோஷன் வீடியோவை ரிகார்ட் செய்யலாம்:

லெனோவா Z2 ப்ளஸ் மாடலின் 13 எம்பி கேமிராவில் வினாடிக்கு 120 பிரேம் கேப்ட்சர் செய்யும் அளவுக்கு டீஃபால்ட் திறன் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த கேமிரா மூலம் வினாடிக்கு 240 மற்றும் 960 பிரேம் வரை நீங்கள் வீடியோவை ஸ்லோ மோஷனில் ஷூட் பண்ணும் வகையில் செட்டிங்ஸ் உள்ளது.

2. முதல் பக்கத்திலேயே இத்தனை வசதிகளா?

ஹோம் பட்டன் என்று சொல்லப்படும் முதல் பக்கத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் மட்டுமின்றி மல்டி லெவல் வசதிகள் உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சிரமமே இருக்காது. ஆப்ஸ்களுக்கு செல்ல இடது புறமும் வலது புறமும் ஸ்வைப் செய்தால் போது. அதேபோல் நீண்ட பிரஸ் செய்தால் ஹோம் பக்கத்திற்கு சென்றுவிடும். இதுபோன்ற பல வசதிகள் இந்த லெனோவா Z2 ப்ளஸ் மாடலில் உள்ளது.

3. குவிக் சுவிட்ச் பேனல்:

ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தியவர்கள் அனைவருக்கும் குவிக் சுவிட்ச் பேனல் என்றால் என்ன என்பது தெரியும். கீழே இருந்து மேலே ஒரு முறை அழுத்தி பல வசதிகளை நாம் ஏற்படுத்தி கொள்ளால்ம். அதுமட்டுமின்றி நமக்கு தேவையான முக்கிய விஷயங்களை குவிக் ஷார்ட் கட்ஸ் மூலம் சேமித்தும் கொள்ளலாம்,.

4. நோட்டிபிகேஷன் LED:

லெனோவா Z2 ப்ளஸ் மாடலை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களுக்கு பல்வேறு மெசேஜ் மற்றும் செய்திகளை நோட்டிபிகேஷன் மூலம் காண்பித்து உங்கள் வேலையை சுலபமாக்கும். நோட்டிபிகேஷன் வரும்போது உங்கள் லெனோவா Z2 ப்ளஸ் மாடல் போனில் லைட் ஆன் ஆகி உங்களுக்கு தெரிவிக்கும்.

5. ஸ்க்ரீன் வேக்-அப் எப்படி தெரியுமா?

பொதுவாக ஸ்மார்ட்போன்களை பேண்ட் பாக்கெட்டுக்களில் வைத்திருக்கும்போது தெரியாமல் கை பட்டுவிட்டால் கூட உடனே ஸ்க்ரீன் வேக்-அப் ஆகிவிடும். இதனால் நமக்கு தெரியாமலேயே போனில் பல அம்சங்கள் ஓப்பன் ஆகி நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால் லெனோவா Z2 ப்ளஸ் மாடலில் இரண்டு முறை டேப் செய்தால் மட்டுமே ஸ்க்ரீன் வேக்-அப் ஆகும் என்பதால் பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

6. நம்ம உடம்பையும் இது கவனித்து கொள்ளும்

லெனோவா Z2 ப்ளஸ் மாடல் போன் நீங்கள் வைத்திருந்தால் உங்களுடன் எப்போதும் ஒரு டாக்டர் இருப்பதை போல உணர்வீர்கள். இந்த போன் நீங்கள் நடக்கும் அல்லது ஓடும் அளவும், டிராவல் செய்யும் தூரம், எரிக்கப்படும் கலோரிகள் மற்றும் சில அம்சங்களை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள U-ஹெல்த் என்ற ஆப் மூலம் உங்களுக்கு தெளிவாக காட்டும். எனவே அவ்வப்போது நீங்கள் அதை செக் செய்து கொள்ளலாம்.

7. ஹோம் ஸ்க்ரினே சுற்றும்:

திரைப்படம் அல்லது பாடல்கள் அல்லது கேம்ஸ் விளையாடும்போது லேண்ட்ஸ்கேப் முறையில் ஸ்மார்ட்போனில் ஸ்க்ரீன் பக்கவாட்டில் செயல்படும் என்பது நாம் அறிந்ததுதான். இந்த வசதி கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது. ஆனால் ஹோம் ஸ்க்ரீனே சுற்றும் வசதி ஒருசில மாடல்களுக்கு மட்டுமே உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த லெனோவா Z2 ப்ளஸ் மாடல் ஸ்மார்ட்போன். இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் ஆட்டோ ரொட்டேஷன் மோட்-ஐ எனேபிள் செய்தாலே போதும்

8. ஸ்க்ரீன் ஷாட் வசதியிலும் புதுமை

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் மாடலிலும் ஸ்க்ரீன்ஷான் எடுக்கும் வசதி உள்ளது என்றாலும் இந்த லெனோவா Z2 ப்ளஸ் மாடல் போனில் லாங் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் குறைக்கும் பட்டனை ஒன்று சேர்ந்து அழுத்தினால் உங்கள் லெனோவா Z2 ப்ளஸ் மாடல் போனில் லாங் ஸ்க்ரீன் ஷாட்டுக்கு உரிய ஆப்சன் தோன்றும். மேலும் ஸ்மார்ட்போன் பக்கங்களை ஸ்குரோல் செய்தும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம்.

9. இரவிலும் உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு:

லெனோவா Z2 ப்ளஸ் மாடல் போனில் நைட் மோட் வசதி உள்ளதால் இரவில் இந்த போனை பயன்படுத்துவதால் புளுலைட் உங்கள் கண்களின் பாதிப்புகளை தடுக்கின்றது. நைட் மோட்-ஐ நீங்கள் ஆன் செய்து கொண்டால் உங்கள் கண்களுக்கு செல்லும் புளுலைட்டை குறைக்கும்.

10. பாக்கெட் டயலில் இருந்து பாதுகாப்பு

நீங்கள் மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்திருக்கும் போது கூட்டத்தில் செல்லும்போதோ, அல்லது பஸ் கூட்ட நெரிசலின்போதே மொபைல் போன்களின் ஏதாவது ஒரு பட்டன் ஆகி அதுபாட்டுக்கு வேலை செய்ய தொடங்கிவிடும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் இந்த லெனோவா Z2 ப்ளஸ் மாடல் போனில் பாக்கெட் டயலிங் பிரிவெண்ட் என்ற ஆப்சன் உள்ளது. இதை ஆன் செய்து கொண்டால் தானாகவே டயல் செய்வது தடுக்கப்படும்

Leave a Reply