பச்சைப்பயறு வறுவல்

பச்சைப்பயறு வறுவல்

2தேவையானவை:
முழு பச்சைப்பயறு – ஒரு கப்
சின்னவெங்காயம் – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – கால் கப்
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகம் – ஒரு ஸ்பூன்
இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
பச்சைப்பயறை 7 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும். வெந்த துண்டுகளை எடுத்து ஆறவைத்து சதுரத் துண்டுகளாக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பச்சைப்பயறு வறுவல் ரெடி.

Leave a Reply