மேலும் 4 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்தார்களா? திடுக்கிடும் தகவல்
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த மெக்மூத் அக்தர் என்பவர் இந்திய ராணுவம் குறித்து உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடரந்து இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் நான்கு அதிகாரிகள் இதே காரணத்திற்காக பாகிஸ்தான் திரும்ப உள்ளனர்.
பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் தூதரக முதன்மை செயலாளர்கள் காதீம்உசேன், முடாசிர் சீமா, ஷாகித் இக்பால் மற்றும் சயீத் பரூக் ஹபீப் ஆகியோர்கள் இன்னும் ஒருசில நாட்களில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உரி தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தூதரக ரீதியிலான இந்த பிரச்சனை இருநாடுகளின் விரிசலை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.