இன்றைய ராசிபலன்கள் 02/11/2016
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்&மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள் ரிஷபம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள் மிதுனம்
குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
ராசி குணங்கள் கடகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ராசி குணங்கள் சிம்மம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள் துலாம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள் தனுசு
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். லேசாக தலை வலிக்கும். கொஞ்சம் சிக்கமாக இருங்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள் மகரம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள் கும்பம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள் மீனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்