சிமி தீவிரவாதிகள் என்கவுண்டரை அரசியல் ஆக்க வேண்டாம். அமைச்சர் கிரண் ரிஜிஜூ

சிமி தீவிரவாதிகள் என்கவுண்டரை அரசியல் ஆக்க வேண்டாம். அமைச்சர் கிரண் ரிஜிஜூ

1சமீபத்தில் போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகளை போலீஸார் என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டு அரசியல் ஆக்கி வருவதை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘”சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸாரை கேள்வி கேட்பதும், சந்தேகிப்பதும் ஏற்புடையது அல்ல.

சில வீடியோ காட்சிகளை வைத்துக் கொண்டு போலீஸார் நடவடிக்கையை கேள்வி கேட்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நடவடிக்கைகளில் போலீஸார் கேள்விக்குள்ளாகின்றனர்.

தீவிரவாதிகளை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லையில் தீவிரவாதிகளுக்கு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினரை கேள்வி கேட்பது ஏற்புடையதல்ல. சில காட்சிகளை மட்டுமே வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது” என்று கூறினார்.

Leave a Reply