சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு திடீர் தடை. கேரளா அதிர்ச்சி
தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வந்தது.
மேலும் இந்த அணை கட்ட கேரள அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்த நிலையில் கேரள அரசுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள அரசுக்கும், தமிழக அரசுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. காவிரி வழக்கில் முடிவு காணும் வரை அல்லது தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் வரை சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் இந்த தடையால் கேரள அரசு அதிர்ச்சியும், தமிழக மக்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.