அடுத்தவர் விஷயத்தில் தலையிட மாட்டேன். கமல்-கவுதமி பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன்
13 வருடங்கள் இணைந்து வாழ்ந்த கமல்ஹாசனை பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன் மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்ததாக வதந்திகள் மிக வேகமாக பரவின.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘ஸ்ருதிஹாசன் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டார். அவரைப் பொருத்தவரை அவர் பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.