அமிதாப்பச்சனை ஹிலாரி கிளிண்டன் விசாரித்தது ஏன்? பரபரப்பு தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளனர்.
இந்நிலையில் ஹிலாரியின் இமெயில் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய அமெரிக்க நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளதால் இந்த விவகாரம் ஹிலாரிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் ஹிலாரி கிளிண்டன் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரது நெருங்கிய தோழியான பாகிஸ்தானை சேர்ந்த ஹுமா அபைதின் என்பவரது கணவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அந்தோணி வீய்னர் என்பவருக்கு சொந்தமான லேப்டாப் மூலம் அனுப்பப்பட்ட சுமார் ஆறரை லட்சம் இமெயில் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் எப்.பி.ஐ. தற்போது விசாரணை செய்து வருகிறது.
இந்த இமெயில்களில் ஒன்றில் அமிதாப் குறித்த தகவல் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
20-7-2011 அன்று ஹிலாரிக்கும் ஹுமா அபைதினுக்கும் இடையில் நடைபெற்ற இந்த இமெயில் பரிமாற்றத்தில், ‘நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தோமே அந்தப் புகழ்பெற்ற வயதான இந்திய நடிகரின் பெயர் என்ன?’ என்று ஹிலாரி கேட்க, அதற்கு ஹுமா அபைதின், ‘அமிதாப் பச்சன்’ என்று இமெயில் மூலம் பதிலளித்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் எதற்காக அமிதாப்பச்சன் குறித்து விசாரித்தார்