மக்கள் நல கூட்டணியில் நீடிக்கும் குழப்பம். வைகோ ஓரங்கட்டப்படுகிறாரா?
மக்கள் நலக்கூட்டணியை ஒருங்கிணைத்த வைகோவே அந்த கூட்டணியை உடைத்துவிடுவார் என தெரிகிறது. தேமுதிகவை மக்கள் நலக்கூட்டணியில் இணைத்தது குறித்தும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் வைகோ பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மூன்று தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவிரும்பவில்லை என்று வைகோ தன்னிச்சையாக கூறியதை திருமாவளவனும் இடது சாரிகளும் ரசிக்கவில்லை.
இந்நிலையில் தேமுதிக ஆதரவு கேட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க தயார் என கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. மேலும் மக்கள் நலக்கூட்டணியின் முக்கிய முடிவுகளை இனி வைகோவை ஆலோசிக்காமலேயே செயல்படுத்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வைகோவை அந்த கூட்டணி ஓரங்கட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.