பிரதமரின் அறிவிப்பால் 3 தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு
பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகளுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000, ரூ.500 என ஒருசில அரசியல் கட்சிகள் கொடுத்து வருவதாக கூறப்பட்டது.
நேற்று இரவு முதல் திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாக்காளர்களுக்கு ரூ.100 நோட்டுக்களை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பின்னர் இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.