டிரம்ப் முன்னிலை எதிரொலி. இந்திய பங்குச்சந்தைகள் பயங்கர சரிவு

டிரம்ப் முன்னிலை எதிரொலி. இந்திய பங்குச்சந்தைகள் பயங்கர சரிவு

sharemarketஅமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான தகவல்களின்படி டொனால்ட் டிரெம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 209 வாகுகளும், டொனால்ட் டிரம்ப் 244 வாக்குகளும் பெற்றுள்ளார். வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருவாரியான கருத்துக்கணிப்புகள் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் கருத்துக்கணிப்புகளை உடைத்து டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் நிலவரப்படி சென்செக்ஸ் 983 புள்ளிகளும் நிப்டி 323 புள்ளிகளும் சரிந்துள்ளது,. அதேபோல் கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணையின் விலையும் பயங்கரமாக குறைந்துள்ளது.

Leave a Reply