ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? லண்டன் தமிழர்களிடம் ரிச்சர்ட் தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணமடைந்துவிட்டதாகவும், டிஸ்சார்ஜ் ஆவது எப்போது என்பது குறித்து அவரே முடிவு செய்வார் என்றும் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் லண்டனில் வாழும் தமிழர்கள் நேற்று டாக்டர் ரிச்சர்ட் அவர்களை சந்தித்து தமிழக முதல்வருக்கு சிகிச்சை அளித்ததற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
அவர்களிடையே பேசிய ரிச்சர்ட், தமிழக முதல்வருக்கு சிகிச்சை அளித்ததற்கு பெருமைப்படுகிறேன். அவர் இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார். அவருடைய உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் கொடுத்த சிகிச்சைகள் வெற்றி அடைந்து வருகின்றது என்று கூறினார்.
மேலும் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது பெரும் அன்பு வைத்திருப்பதாகவும்,உலகின் எத்தனையோ பெரிய மனிதர்களுக்கு சிகிச்சை அளித்திருந்தாலும்,ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன் எனவும் பீலே தெரிவித்துள்ளார்.