இந்த வாரம் சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே ஒரு அறிவிப்பால் நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் இன்று முதல் மாற்ற தயாராக உள்ளனர்.
இந்நிலையில் நாளை இரண்டாவது சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று வங்கியில் மிக அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு செய்துள்ளது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்ற வசதியாக இந்த இரண்டு நாட்களும் வங்கிகள் செயல்படும் என்றும் பொதுமக்கள் கவலையின்றி தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் மேலும் நெரிசலை தவிர்க்க சிறப்பு கவுண்டர்களுக்கு அனைத்து வங்கிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.