டிரம்ப்பை சந்திக்கும் முதல் விவிஐபி இவர்தான்

டிரம்ப்பை சந்திக்கும் முதல் விவிஐபி இவர்தான்

japanஅமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற டொன்லாட் டிரம்ப் வரும் ஜனவரியில் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்பட புதிய அதிபர் டிரம்புக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டிரம்பை சந்திக்கும் முதல் உலக தலைவர் இவராகத்தான் இருக்கும்.

டிரம்ப்-ஷின்சோ அபே சந்திப்பு குறித்த தகவலை ஜப்பான் கேபினட் செயலாளர் யோஷிகிடெ சுகா உறுதி செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், “அபேவும் டிரம்பும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது ஜப்பான் – அமெரிக்கா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உறுதி செய்தனர். அவர்களது சந்திப்பு இருதரப்பினருக்கு இடையேயான நம்பிக்கையை வளர்ப்பதற்கு நல்ல தொடக்கம். டிரம்ப், அபே இடையேயான சந்திப்பு வரும் நவம்பர் 17-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Leave a Reply