சிபிஎஸ்இ: 10-ஆம் வகுப்பு தேர்வை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை

சிபிஎஸ்இ: 10-ஆம் வகுப்பு தேர்வை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை

cbse-results-2013_350_053014042849-11
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை கட்டாயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

தில்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைத் தவிர, மற்ற அனைத்து பாடத்திட்டங்களிலும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாகியுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலிருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும்?

எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒருவேளை, பொதுத்தேர்வைக் கட்டாயமாக்குவது என முடிவெடுக்கப்பட்டால் அது அடுத்த கல்வியாண்டில் இருந்துதான் நடைமுறைபடுத்தப்படும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

Leave a Reply