முருங்கைக்காய் மிளகு குழம்பு

முருங்கைக்காய் மிளகு குழம்பு

1என்னென்ன தேவை?

முருங்கைக்காய் – 2

புளி – எலுமிச்சை அளவு

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 ஆர்க்கு

பெருங்காயம் – சிறு துண்டு

மிளகு – 2 டீஸ்பூன்

தனியா – ஒரு டீஸ்பூன்

வெல்லம் – சிறு துண்டு

கடுகு, மஞ்சள் பொடி – தலா ஒரு டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முருங்கைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல நறுக்கிக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தனியா, பெருங்காயம், தலா அரை டீஸ்பூன் உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் தண்ணீர் விடாமல் பொடித்துக்கொண்டு பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரையுங்கள்.

வாணலியில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, மீதமிருக்கும் பருப்பு வகைகள், ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள், முருங்கைக்காய், புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். முருங்கைக்காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்துக் கிளறி, ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கிவையுங்கள். மிளகுக் குழம்பில் முருங்கைக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். விரும்பினால் ஒரு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

Leave a Reply