புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ராம்தாஸ் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ராம்தாஸ் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

ramdossரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின்னர் செல்லாத நோட்டுக்களுக்கு பதிலாக தற்போது ரூ.2000 உள்பட பலவித நோட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய நோட்டுக்களில் எழுத்துப்பிழை மற்றும் மத அடையாளங்கள் இருப்பதாக ஏற்கனவே பலர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தற்போது பாமக தலைவர் ராமதாஸ், புதிய ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி மத்திய அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கண்டனத்துக்குரியது.

தேவநாகரி எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் பாரளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அத்தகைய சட்டம் எதுவும் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் தேவநாகரி எண்கள் அச்சிடப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply