6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.91,800 கோடி சரிவு

6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.91,800 கோடி சரிவு

1அதிக சந்தை மதிப்பு கொண்ட 10 இந்திய நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வார பங்குச்சந்தையில் சரிவைக் கண்டுள்ளது. இந்த 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.91,800 கோடி அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் மிகப் பெரிய அளவுக்குச் சரிந்துள்ளது.

டிசிஎஸ் தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, இன்போ சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் ஹிந் துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறு வனங்களின் சந்தை மதிப்பும் சரிந்துள்ளன. ஹெச்டிஎப்சி பேங்க், ஓஎன்ஜிசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வைக் கண்டுள்ளன.

டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.44,344.48 கோடி சரிந்து தற்போது ரூ.4,14,784.93 கோடியாக இருக்கிறது. ஹெச்டிஎப்சி நிறு வனத்தின் சந்தை மதிப்பு ரூ.17,344 கோடி சரிந்து ரூ.2,01,402.74 கோடி யாக உள்ளது. இன்போஸிஸ் நிறு வனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,243.55 கோடி சரிந்து தற்போது ரூ.2,11,743.84 கோடியாக உள்ளது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,063.88 கோடி சரிந்து தற்போது ரூ.1,73,336.76 கோடியாக உள்ளது. ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,390.19 கோடி சரிந்து ரூ.2,94,395.81 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,414.25 கோடி சரிந்து தற்போது ரூ.3,24,791.58 கோடியாக உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத் தின் சந்தை மதிப்பு ரூ.23,327.15 கோடி உயர்ந்து தற்போது ரூ.2,11,846.19 கோடியாக உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.8,157.66 கோடி உயர்ந்து ரூ.3,25,210.41 கோடியாக உள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,432.07 கோடி உயர்ந்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,165.53 கோடி உயர்ந்துள்ளது.

மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply