விரலில் மை வைக்கப்படும். அடிக்கடி பணம் எடுப்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
கருப்பு பணத்தை ஒழிக்கவே பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாட்டில் உள்ள 80% பேர் பாதிக்கப்பட்டிருந்தும் நாட்டின் நலனுக்காக தாங்கி கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பு பணம் வைத்துள்ள முதலாளிகள் பயங்கரமாக சிந்தித்ததன் விளைவாக கமிஷனுக்கு ஆட்களை நியமனம் செய்து ஒவ்வொருவரிடமும் ரூ.4000 பழைய ரூபாய்களை கொடுத்து மாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி இனிமேல் ரூபாய் நோட்டை மாற்ற வருபவர்களின் விரலில் மை வைக்கப்படும். அந்த மை 24 மணி நேரத்துக்கு அழியாது என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கருப்புப்பணம் வைத்துள்ள பெரும் முதலாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.