500, 1000 ரூபாய் நோட்டு உத்தியின் சாதகமும் பாதகமும்: நிபுணர்கள் பார்வையில் 15 அம்சங்கள்

500, 1000 ரூபாய் நோட்டு உத்தியின் சாதகமும் பாதகமும்: நிபுணர்கள் பார்வையில் 15 அம்சங்கள்

1முறைசாரா பொருளாதாரமானது முறை சார்ந்த பொருளாதாரத்துக்குள் வரும் என்பதால் 500, 1000 ரூபாய் நோட்டு நடவடிக்கையால், இந்திய பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

* அதாவது, 500, 1000 ரூபாய் நோட்டு நடவடிக்கையால், குறுகிய காலத்துக்கு சிக்கல் ஏற்பட்டாலும், நீண்ட கால அடிப்படையில் பெரிய நன்மைகளே விளையும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதுற்குமாக அமல்படுத்தப்பட உள்ளதால், இந்த நடவடிக்கையுடன் இணைந்து பொருளாதாரத்துக்கு நன்மையே விளையும் என்று கருதப்படுகிறது. வங்கிகளின் செயல்பட முடியா சொத்துக்களும் குறையும். இதனால்தான் தனியார் துறைகளுக்கு வங்கிக்கடன்கள் அளிக்க முடியாமல் போயுள்ளது என்று கூறப்படுகிறது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை பொருளாதார அதிகாரி அஜித் ரனாதே கூறியதன் முக்கிய அம்சங்கள்:

* “இப்போதைக்கு பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மரபு பொருளாதார கோட்பாடுகளின் படி இது பணவாட்டத்தை ஏற்படுத்தும். இதனால் பொருளாதாரம் சற்றே சுருங்கவே செய்யும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் தாக்கம் ஏற்படும்,

* முறைசார்ந்த பொருளாதாரத்துக்குள் நிறைய சேமிப்புகள் உள்ளே வருகின்றன. இந்தியாவில் சேமிப்பு விகிதம் அதிகம். ஆனால், அதன் நிதிப்பகுதி குறைவாக உள்ளது. இப்போது இது உயர்வடையும்.

* பணமற்ற வர்த்தக நடவடிக்கைகள், ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றால் முறைசார்ந்த பொருளாதாரம் நன்மை பெறும்.”

கேபிஎம்ஜி உயரதிகாரி கிரிஷ் வன்வாரி கூறியதன் முக்கிய அம்சங்கள்:

* “இந்த நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமல் இரண்டும் சேர்ந்து இன்னும் 2 ஆண்டுகளில் பொருளாதாரம் முன்னேற்றமடையும். பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டும்.

* வங்கிகளில் செயல்படா சொத்துக்களின் அளவு குறையும். காரணம், தற்போது வங்கிக்குள் நிறைய பணம் வருகிறது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் பணம் அதிக அளவில் சேமிக்கப்படுவதால் இறுகிய பொருளாதாரம் தளரும்.

* அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். அதாவது, சரியான திசையில் செல்லக்கூடிய மிகவும் தைரியமான முடிவு என்று தெரிவித்துள்ளனர்.”

எதற்கெல்லாம் பாதிப்பு:

* ஆனால், இந்த நடவடிக்கையினால் பணப்புழக்கம் அதிகமிருக்கும் துறைகளான ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் ஜுவல்லரி துறைகள் பாதிப்படையும்.

அமெரிக்க வங்கியின் தலைமைப் பொருளாதார அதிகாரி இந்திரனில் சென்குப்தா கூறியதன் முக்கிய அம்சங்கள்:

* “பணம் வங்கிகளுக்கு வருவதாலும், இதில் பல அரசுக்கு நேரடியாக வரியாகப் போவதாலும் வட்டி விகிதங்கள் குறையும்.

* ஆனாலும், ஒரு குறுகிய கால தேவை – அதிர்ச்சி ஏற்படும். வட்டிவிகிதம் குறைக்கப்பட்டால் இந்த நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.”

* கோடக் ஈக்விட்டீஸ் நிறுவனம் கூற்றுப்படி, சிறிய வர்த்தகர்கள், சுய-தொழில் செய்வோரும் அதிக வருவாய் கணக்குக் காட்டி வரி செலுத்துவார்கள். இதனால் முறைசார்ந்த பொருளாதாரம் வலுவடையும்.

* ஐசிஐசிஐ புருடெண்ஷியல் பரஸ்பர நிதியத்தின் தலைமைச் செயலதிகாரி நிமேஷ் ஷா கூறியது: “வட்டி விகிதக் குறைப்பு மற்றும் முறைசார்ந்த பொருளாதாரத்தில் பணம் வருவாய் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பொருளாதாரத்தைக் கையாள்வதில் உதவும்.”

* பினான்சியல் சர்விசஸ் நிறுவனத்தின் மோதிலால் ஆஸ்வால் வாடிக்கையாளர்களுக்கான தங்களது குறிப்பில், ‘நுகர்வு பாதிக்கப்படுவதால் வியாபாரிகள், உற்பத்தியாளர்களின் கடன் செலுத்தும் திறன் குறையும்’ என்று கூறியுள்ளார்.

என்னதான் பலன்?

* மொத்தத்தில், இந்த நடவடிக்கையால் பண மதிப்பு அதிகரிக்கும், பணவீக்கம் குறையும், வங்கிகள் வர்த்தக நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்படும்.

* ரியல் எஸ்டேட் விலைகள் 20-25% குறையும். பவுதிக சொத்துகளிலிருந்து நிதிசார் சொத்துகளாக மெதுவே மாற்றமடைவதால் பங்குச்சந்தை பயனடையும் என்று ரூ.500, 1000 நடவடிக்கைக்கு பொருளாதார நிபுணர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்

Leave a Reply