கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறுமா?

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறுமா?

1கருப்பு பணத்தை ஒழிக்கவே நடுத்தர மக்களை பாதிக்கும் என்று தெரிந்தும் மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. ஆனால் எந்த நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு வெளியானதோ அந்த நோக்கத்தை அடையுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதற்கு காரணம் கருப்பு பணம் வைத்துள்ள முதலாளிகளின் திகிடுதித்தங்கள்தான்

மாநகராட்சிகள், குடிநீர் வாரியங்களில் இருந்த 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளாக கருப்பு பண முதலாளிகள் தங்கள் செல்வாக்கால் மாற்றியுள்ளார்கள். கருப்பு பண முதலாளிகள் இந்த பணத்தைத்தான் அதிகாரிகள் வங்கியில் கட்டியதாக தெரிகிறது.

இதேபோல் பேருந்துகளில் வசூலாகும் 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் கருப்பு பண முதலாளிகளிடம் சென்று, அதற்கு பதிலாக வாங்கப்பட்ட ரூ.1000, ரூ.500கள்தான் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் வங்கியில் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தையும் கருப்பு பண முதலைகள் தங்கள் கைவரிசையை காட்டி மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பெரும் முதலாளிகள் யாரும் வங்கியில் வரிசையில் நின்று பணத்தை பெறவில்லை. இந்த சாமர்த்தியம் இல்லாத சாமானியன் தான் தினமும் வேலையை விட்டுவிட்டு வரிசையில் அப்பாவியாக நிற்கின்றான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply