75 நாடுகளை ஆட்டிப்படைத்த ஜிகா வைரஸ் கட்டுக்குள் வந்தது. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

75 நாடுகளை ஆட்டிப்படைத்த ஜிகா வைரஸ் கட்டுக்குள் வந்தது. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

zika29உலகில் உள்ள பல நாடுகளை அச்சுறுத்தி வந்த ஜிகா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் இதுகுறித்து பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் வாபஸ் வாங்கியுள்ளது. ஆனாலும் உலகம் முழுவதும் சுமார் 75 நாடுகளில் பரவியுள்ள ஜிகா வைரசை ஒட்டுமொத்தமாக அழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசில் நாட்டில்தான் இந்த வைரஸ் முதன்முதலில் தோன்றியது. ஏடஸ் என்ற கொசு கடிப்பதனால் ஏற்படும் ஜிகா வைரஸ் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அந்தந்த நாடுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் கடந்த 8 மாதங்களாக ஜிகா வைரஸ் அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் நடைமுறையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply