கருப்பு பணத்தை பறி கொடுத்தவர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்ரனர். ஸ்மிதி இரானி

கருப்பு பணத்தை பறி கொடுத்தவர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்ரனர். ஸ்மிதி இரானி

smritiiraniகருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 ஒழிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கருப்பு பணத்தை பறிகொடுத்து இழந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மற்ற அனைவரும் பெரும் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: கருப்புப் பணம் பதுக்கியவர்கள், ஊழலில் திளைத்தவர்கள், ஏழை மக்களின் பணத்தை சுரண்டியவர்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பறிகொடுத்தவர்கள்தான், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்குகின்றனர். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

பழைய பணத்தை மாற்றுவதற்காக சிரமத்தை பொறுத்துக் கொண்டு வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அனைவருமே, ஊழலுக்கு எதிரான போர்ப் படையினரே. கருப்புப் பணத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் அழைப்பை முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட அவர்களுக்கு, நாடே நன்றிக் கடன்பட்டுள்ளது

இவ்வாறு அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply