பணத்தை எப்படி பதுக்குவது என்பது ப.சிதம்பரத்திற்கு தெரியும். தமிழிசை செளந்திரராஜன்

பணத்தை எப்படி பதுக்குவது என்பது ப.சிதம்பரத்திற்கு தெரியும். தமிழிசை செளந்திரராஜன்

tamilisaiரூபாய் நோட்டு விவகாரம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ரூ.400 கோடி கருப்பு பணத்திற்காக இந்திய மக்கள் அனைவரையும் மோடி துன்புறுத்துவதாக அவர் கூறி வருகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு நேற்று நடைபெற்ற திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்,. அவர் கூறியதாவது: கறுப்பு பணத்தை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கும், தமாகவிற்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. மக்களை கவலைக்குள்ளாக்குவது போன்ற ப.சிதம்பரம் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. இந்தியாவில் மொத்தம் ரூ.400 கோடி தான் கள்ளப் பணம் உள்ளது என்றும், ரூ.300 கோடிதான் நாள் ஒன்றுக்கு பணம் அச்சடிக்க முடியும் என்று கூறும் ப.சிதம்பரத்துக்கு தான் தெரியும், பணத்தை எப்படி அடிப்பது, எப்படி பதுக்குவது என்பதும்.

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தொகையை, மோடி செலுத்தவுள்ளதாக கூறிவருகின்றனர். ஆனால், உண்மையில் அவர் கூறியது என்னவென்றால், ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தும் அளவுக்கு நமது நாட்டில் கருப்பு பணம் பதுக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான்.

ரூ.100, 1000 கூட இல்லாமல் கட்சி நடத்தி வரும் அண்ணன் திருமா அவர்கள் பாராட்டுக்குரியவர்கள், கறுப்பு பணத்தை வைத்து கட்சி நடத்தியவர்கள், ஆட்சி நடத்தியவர்கள், வாழ்க்கை நடத்தியவர்கள்தான் இன்று கவலைப்படுகிறார்கள், அரசுக்கு எதிரான போராட்டமும் அறிவிக்கின்றார்கள்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் செல்லாத பணத்தை மக்களிடம் கொடுத்துள்ளார்கள் என்பதுதான் கவலை அளிக்கிறது. இதுவே பணம் கொடுத்து நடக்கும் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்

இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் பேசினார்.

Leave a Reply