ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம்

ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம்

Entrance-Examஐஐடி நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஐ.ஐ.டி பிரதான நுழைவுத் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மாற்றங்கள் குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், 12-ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்த பட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 10 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், J.E.E. என்ற மெயின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே, ஆதார் எண் விபரங்களையும் குறிப்பிட வேண்டும்.

அந்த விபரங்கள் உடனடியாக ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பதாரர் அளித்த விபரத்திற்கும், ஆதாரில் உள்ள விபரத்திற்கும் வேறுபாடுகள் இருந்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply