ஒரே ஒரு பாட்டில் மூலம் ரூ.32 லட்சம் சம்பாதித்தவர் தற்போது ஜெயிலில்..

ஒரே ஒரு பாட்டில் மூலம் ரூ.32 லட்சம் சம்பாதித்தவர் தற்போது ஜெயிலில்..

1ஒரே ஒரு குளிர்பான காலி பாட்டில் மூலம் ரூ.32 லட்சம் சம்பாதித்த ஜெர்மன் குளிர்பான வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி பாட்டிலை மறுசுழற்சி செய்ய, காலி பாட்டிலை போடும் மிஷின் உள்ளது. இந்த மிஷினில் காலிபாட்டிலை செலுத்தினால் அதற்கான பணம் வெளியே வரும்

இந்நிலையில் குளிர்பான வியாபாரி ஒருவர் இந்த மிஷினில் உள்ள தொழில்நுட்பத்தை சற்று மாற்றி அமைத்து முறைகேடாக மிஷினில் இருந்து ரூ.32,35,831 பெற்றுள்ளார். அதாவது அந்த மிஷினில் காலி பாட்டிலை செலுத்தினால் பாட்டிலுக்கான பணம் கிடைப்பதோடு காலி பாட்டிலும் இன்னொரு வழியாக வந்து விழும்படி தொழில்நுட்பத்தை மாற்றி அமைத்திருந்தார். இதன் மூலம் ஒரே பாட்டிலை மீண்டும் மீண்டும் சுமார் 1,77,451 முறை மிஷினில் செலுத்தி பணம் பெற்றுள்ளார்.

ஒருகட்டத்தில் விற்பனையாகும் குளிர்பானங்களின் எண்ணிக்கையை விட காலி பாட்டிலின் எண்ணிக்கை அதிகமானதால் சந்தேகம் அடைந்த அந்த குளிர்பான நிறுவனம் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த குளிர்பான வியாபாரி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply