புதிய ரூ.500, ரூ.2000 செல்லாது. நேபாளம் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நேபாளம் அறிவித்துள்ளது.
அந்நிய பரிமாற்ற மேலாண்மை சட்டத்தின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு நோட்டிஸ் பெற்ற பின்னரே புதிய நோட்டுக்கள் செல்லும் என்ற முடிவு எடுக்க முடியும் என்றும் கூறியுள்ள நேபாளம் ராஸ்டிரா வங்கி அதுவரை புதிய நோட்டுக்கள் நேபாளத்தில் செல்லாது என்று அறிவித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதிலும், புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.