வங்கிக்கணக்கை தாக்கல் செய்யுங்கள். பாஜக எம்.பி., எம்.எல்.ஏகளுக்கு மோடி உத்தரவு
பா.ஜ.கவின் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ உட்பட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தங்கள் வங்கி பணப்பரிமாற்றம், டெபாசிட் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பா.ஜ.க தலைவர் அமித்ஷாவிடம் இந்த கணக்குகளை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையிலான வங்கி பரிமாற்றங்களை ஜனவரி 1-ம் தேதி சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். இன்று காலை பா.ஜ.க எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.